shadow

ஜியோபோன் முன்பதிவுகள் திடீர் நிறுத்தம்! ஏன் தெரியுமா?

இந்திய டெலிகாம் சந்தையில் சேவை கட்டணங்களை முற்றிலும் மாற்றியமைத்த ரிலையன்ஸ் ஜியோ, புதிய பீச்சர்போன் ஒன்றை ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்தது. அந்த வகையில், ஜியோபோன் முன்பதிவுகள் ஆகஸ்டு 24-ம் தேதி மாலை துங்கியது.

எனினும் ஜியோபோன் முன்பதிவுகள் நிறுத்தப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஜியோபோன் வாங்க பல லட்சம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதால், முன்பதிவு நிறுத்தப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜியோபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டிருப்பதை ஜியோ இணையபக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இத்துடன் ஜியோபோன் முன்பதிவு மீண்டும் துவங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி ஆப்லைன் முறையிலும் ஜியோபோன் முன்பதிவு நடத்தப்பட்டது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டுமின்றி பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. எனினும் ஆஃப்லைன் முறையிலும் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இல்லை.

முன்பதிவு நிறுத்தப்பட்டது குறித்து ஜியோ இணையபக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலமாகவே தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜியோ சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்தியாவில் ஜியோபோன் வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜியோ பிரான்டு கொண்ட முதல் போனில் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் ஜியோ டிவி போன்ற செயலிகள் மற்றும் மூக வலைத்தள செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணம் செலுத்தி வாங்கிட முடியும். முன்பணத்தை வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply