ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிரபார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தபோது, மதுரை ஐகோர்டு நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், ஜனவரி 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply