ஜப்பானில் ராமி புயல்: வேரோடு மரங்கள் சாய்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜப்பானில் ராமி புயல்: வேரோடு மரங்கள் சாய்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 400 பேர் பலியாகியுள்ள அதிர்ச்சி செய்தியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது ஜப்பான் நாட்டையே ராமி என்ற புயல் புரட்டி போட்டுள்ளது.

இந்த ராமி புயலால் ஜப்பானில் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.

புயல் காரணமாக கான்சாய் நகரத்தில் உள்ள சர்வதேச விமானநிலையம் மற்றும் ஓசாகா விமானநிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராமி புயல் காரணமாக ஒக்கினாவா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply