ஜனவரியில் ரஜினியின் அரசியல் கட்சி: சத்தியநாராயணா ராவ் பேட்டி

ஜனவரியில் ரஜினியின் அரசியல் கட்சி: சத்தியநாராயணா ராவ் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது என்ற கருத்து அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் காலா, மற்றும் 2.0 படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று தர்மபுரி வந்த ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர்12ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வராது. ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் நிச்சயம் வரும். அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார், மக்கள் ரஜினியை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply