ஜடேஜாவின் போராட்டம் வீண்: 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்திய அணி வெற்றியை வெற்றி பெற வைக்க கடைசி வரை ஜடேஜா போராடிய நிலையில் அவரது போராட்டம் வீணானது என்பதை குறிப்பிடுகிறது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராத் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்தது

இதனால் 274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெமினி ஜெமிசான் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply