சோனமுத்தா போச்சா? தோல்வி அடைந்த திமுகவை வெறுப்பேற்றிய பாஜகவின் டுவீட்

திமுக மற்றும் காங்கிரஸ் கைவசம் இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளது

இதனை அடுத்து திமுக கூட்டணி வட்டாரங்கள் கடும் சோகத்தில் உள்ள நிலையில் திமுக கூட்டணியை வெறுப்பேற்றும் வகையில் பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது

அந்த டுவீட்டில் சோனமுத்தா போச்சா? என்று குறிப்பிட்டு திமுக தொண்டர் ஒருவர் சோகமாக உட்கார்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது

வடிவேலுவின் காமெடி வசனனாப இந்த வசனத்தை பாஜக பயன்படுத்தி மீம்ஸ் செய்துள்ளது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த டுவீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தொண்டர் ஒருவர் ’அதிமுக வெற்றி பெற்றாலும் திமுக வெற்றி பெற்றாலும் ஒரு திராவிட கட்சியின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் பாஜகவிற்கு தமிழகத்தில் இடமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply