சொந்த காசில் 1,20,000 மரங்கள் நட்ட தமிழக கண்டக்டர்

சொந்த காசில் 1,20,000 மரங்கள் நட்ட தமிழக கண்டக்டர்

எம்.யோகநாதன். தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 49.

இவர் கடந்த 29 வருடங்களாக தொடர்ந்து செடிகளை நட்டு வருகிறார். தனது பேருந்து எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரில் தினமும் மரங்களை நடுவது இவரது வழக்கம். தனது வருமானத்தில் சுமார் 40% இதற்காகவே இவர் செலவிடுகிறார்.

இதுவரை சொந்த காசில் 1,20,000 மரங்கள் நட்டுள்ள இவர் தொடர்ந்து மரங்களை நடுவதுதான் தனது முதல் பணி என்று கூறி வருகிறார்.

 

Leave a Reply