சொந்தமாக சம்பாதித்து கார் வாங்கி குக் வித் கோமாளி புகழ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் புகழுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே

அதுமட்டுமின்றி இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் பிசியான ஒரு காமெடி நடிகராக மாறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் புகழின் டைமிங் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ள நிலையில் தற்போது அவர் சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார்

சொந்தமாக சம்பாதித்து வாங்கிய காரை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்து இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொந்த உழைப்பில் கார் வாங்கிய புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply