சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

ஆங்கிலேயரை எதிர்த்து ஆந்திராவில் போராடிய பாளையத்துக்காரரான நரசிம்மரெட்டியின் வீரமும் வீரமரணமும் தான் இந்த படம்

இன்றைய தலைமுறையினர் வரலாற்றில் இடம்பெறாத ஒரு சுதந்திர போராட்ட வீரனின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பு

படமாக்கப்பட்ட இடங்கள், அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம், சண்டைக் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்துமே உலக தரத்தில் அமைந்துள்ளது

நரசிம்ம ரெட்டி கேரக்டராகவே மாறிய சிரஞ்சீவியின் கம்பீரமான தோற்றம், கோபப்பார்வை, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளுக்குப் பயப்படாத வீரம் என படம் முழுவதும் ஒன்மேன் ஷோவாக மிளிர்கிறார்

எதிரியை தண்ணீருக்கடியில் தலையை சீவி எறியும் காட்சி படம் பார்ப்பவர்களையும் புல்லரிக்க வைக்கின்றது

சிரஞ்சீவி தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே சிறப்புத்தோற்றத்தில் வருவது போலவே இருப்பது ஒரு மைனஸ்

மொத்தத்தில் ஒரு சுதந்திர போராட்ட வீரனுக்கு செலுத்தப்படும் வீர வணக்கமாகவே இந்த படம் கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.