சோனியா, ராகுல் காந்திக்கு வருமான வரி நோட்டீஸ்

சோனியா, ராகுல் காந்திக்கு வருமான வரி நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் இந்நாள் தலைவருமான ராகுல் காந்தியும் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வரித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னதாக வருமானத்தை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியாவும் ராகுலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சோனியா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராகி, வருமான வரித்துறை தவறான கணக்குகள் மூலம் 141 கோடி ரூபாய் வரை வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது என்றார்.

Leave a Reply