shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் சுமார் 1000 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போதுப் பாதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது செய்யாறு அதிமுக எம்.எல்.ஏ. தூசி மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா உறுதி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *