செய்தியாளரின் ரத்தத்தை கர்சீப்பால் துடைத்த ராகுல்காந்தி

செய்தியாளரின் ரத்தத்தை கர்சீப்பால் துடைத்த ராகுல்காந்தி

சாலை விபத்தில் ஒன்றில் படுகாயமடைந்த செய்தியாளர் ஒருவரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது

டெல்லியில் உள்ள ஹுமாயூன் சாலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் நிகழ்ந்த ஒரு விபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர வியாஸ் என்ற பத்திரிகையாளர் காயமடைந்தார். இதனைக் கண்ட ராகுல் காந்தி, காயமடைந்த செய்தியாளரை தனது வாகனம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வாகனத்தில் சென்றபோது, பத்திரிகையாளரின் தலையில் வழிந்த ரத்தத்தை ராகுல் காந்தி தனது கர்சீப்பால் துடைத்துவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply