செப்டம்பர் 8ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்


தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான திரைப்படமான ‘அசுரன்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை தனுஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்தின் டிரைலர் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், ரசிகர்கள் இதனை வரவேற்க தயாராகுங்கள் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். இன்று தனுஷின் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் இல்லை என்பதால் சோர்ந்து போயிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகம் அளித்துள்ளது

தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *