shadow

செப்டம்பர் 29-ல் கலெக்டர் ஆகிறார் நயன்தாரா

பிரபல நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள ‘அறம்’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் கலெக்டர் வேடத்தை அவரது ரசிகர்கள் அன்றைய தினத்தில் இருந்து ரசிக்கலாம்

கோபிநாயனார் இயக்கியுள்ள இந்த படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்றைய சமூக பிரச்சனை ஒன்றை அலசவிருப்பதாகவும், நயன்தாரா கலெக்டர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply