செப்டம்பர் 14-ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடித்திருவிழா

செப்டம்பர் 14-ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடித்திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அடுத்த (செப்டம்பர்) மாதம் 13-ந்தேதி (புதன் கிழமை) ஸ்ரீநம்பெருமாள் ஜெயந்தி புறப்பாடு நடக்கிறது. அன்று காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை நடக்கிறது.

காலை 9.15 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 9.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபம் சேர்தலும், 11 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளல், 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஜன சேவையும், 5.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது.

மாலை 5.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. தொடர்ந்து 14-ந்தேதி (வியாழக்கிழமை) உறியடி திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. இரவு 8.15 மணிக்கு உறியடி கண்டருளல் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

Leave a Reply