சென்னை வருகிறார் அமித்ஷா: அடுத்த குறி தமிழ்நாடா?

முத்தலாக், காஷ்மீர் ஆகிய விவகாரங்களை வெற்றிகரமாக முடித்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா, வரும் 11ஆம் தேதி சென்னை வருகிறார்.

இந்தியாவிலேயே பாஜக கால்பதிக்க முடியாத பல மாநிலங்களில் அமித்ஷாவின் அரசியல் தந்திரங்கள் ஜெயித்து கொண்டு வரும் நிலையில் அவருடைய அடுத்தகுறி தமிழகமாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது

எனவே அமித்ஷாவின் சென்னை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிடவே அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply