சென்னை வருகிறது மத்தியக்குழு:

 கொரோனா பரவல் குறித்து ஆய்வு

கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்யும் மத்திய குழு, தற்போது பெங்களூரில் ஆய்வை முடித்த நிலையில் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னை வரவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த ஆய்வுக்குழு முதலில் தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை செய்யவுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான இந்த குழு சென்னை மற்றும் தமிழகத்தில் தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளது.

இந்த ஆய்வுக்கு பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு இந்த குழு பரிந்துரைகள், அறிவுரைகள் கூறும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply