சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் தேவை: ரூ.90 ஆயிரம் சம்பளம்

சென்னை மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

ரூபாய் 90 ஆயிரம் சம்பளம் என்றும் 11 மாத காலத்திற்கு பணியாற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

மகப்பேறு நல மருத்துவர், பொதுமருத்துவர், குழந்தைகள் மருத்துவர் ஆகியோர் வேலைக்கு எடுக்கப்பட இருப்பதாகவும் இதற்கான விண்ணப்பத்தை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஜூலை 27-ஆம் தேதி இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது