சென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்

சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு.

நேரம்: மதியம் 02:00 மணிக்குள்

நாள்: 13.05.2021