சென்னை மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது நபர்

கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பொதுவாக வயதானவர்களைத்தான் தாக்கும் என்றும் வயதானவர்களை அதிகம் பலிவாங்கி வாங்கி வருவதாகவும் கூறப்படுவது உண்டு

ஆனால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 97 வயதான நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது

சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 97 வயது நபர் கடந்த மே 30ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை யின் அடிப்படையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை மருத்துவமனை ஊழியர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். எனவே வயதானவர்களுக்கு வந்தாலும் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக உள்ளது

Leave a Reply