சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை!

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளி, நாளை மறுநாள் சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த வாரம் ஆயுதபூஜை காரணமாக 4 நாட்கள் தொடர்முறை, இந்த வாரம் சீன அதிபர் வருகை காரணமாக 3 நாட்கள் விடுமுறை, இதனையடுத்து தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை என இம்மாதம் விடுமுறை மாதமாக காணப்படுகிறது

Leave a Reply