சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்: பிரதமர் நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை

சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்: பிரதமர் நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்து ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்., பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யாத நிலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்றுச் செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply