சென்னை திரும்பினார் துணை முதல்வர் ஓபிஎஸ்: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்த காரசாரமான விவாதங்கள் நடந்து வந்தன

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டது

இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ் அதன் பின்னர் திடீரென தேனிக்கு சென்றார் அங்கு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்

நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருப்பதை அடுத்து அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply