சென்னை சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்: பெரும் பரபரப்பு

சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் புகைப்பட கலைஞர் யோகேஷ்வரன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார். அப்போது அவரது பைக்கில் இருந்து திடீரென புகை வந்தது. இதனையடுத்து பைக்கை நிறுத்திய அவர் அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

பின்னர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ஊழியர்கள், தீயணைப்பான் கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply