சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

சென்னை உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார

தொடக்க விழா நேற்று நடைபெற்றது

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் தேரணி ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் டீன் டாக்டர் தேரணி ராஜன் பேசியதாவது:

உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் தாய்மார்களிடம் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.