சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவோம்: ஸ்டெர்லைட் சி.இ.ஓ பேட்டி

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவோம்: ஸ்டெர்லைட் சி.இ.ஓ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்டெர்லைட் சி.இ.ஓ ராம்நாத் , உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்றும், கடந்த 8 மாதமாக மூடப்பட்டுள்ளதால் ஆலை பாதுகாப்பு கவலை தருவதாகவும் தெரிவித்தார்.

எனவே ஸ்டெர்லடி தரப்பில் இருந்து மிக விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து மனுதாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply