சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்தது

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் மழை பெய்ததால் மீண்டும் மழை சீசன் ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது

இதனையடுத்து இன்று முதல் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சென்னை மாவட்டத்திற்கு தேவையான குடிநீர் ஆதாரங்களான ஏரிகள் இன்னும் முழுமையாக நிரம்பாததால் இந்த மழையினால் ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply