சென்னை அண்ணா சாலையில் வாகனங்களில் செல்பவர்களிடம் போலீசார் விசாரணை!

சென்னைக்குள் செல்வதற்கு கூட இபதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னையில் வாகனங்களில் செல்பவர்கள் இடம் போலீசார் விசாரணை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் கார் மற்றும் பைக்குகளில் செல்பவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இபதிவு இல்லாமல் பத்து மணிக்கு மேல் வெளியே வந்தவர்களை மறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் தேவை இன்றி சுற்றுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன