சென்னையை தாண்டியும் முழு ஊரடங்கா?

பரபரப்பு தகவல்

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

அதுமட்டுமின்றி இன்றும், வரும் 28ம் தேதி வரை ஞாயிறும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை தவிர வேறு சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டுள்ளனர்

அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின்படி இன்று முதல் கரூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply