சென்னையில் விடிய விடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

chennai rain 4

சென்னையில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதியில் இருந்தனர்

இந்த நிலையில் நேற்று திடீரென சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கிறது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மழை பெய்து இருப்பதாகவும் மழை இன்னும் ஓரிரு நாட்கள் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது