சென்னையில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டின் முதல் நாளே சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னை அண்ணா சாலை உள்பட பல இடங்களில் கடந்த சில மணி நேரங்களாக நல்ல மழை பெய்து வருகின்றது

இந்த நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று முற்பகல் வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் ஒருசில மணி நேரம் சென்னையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் இன்று புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply