சென்னையில் மழை அவ்வளவுதான்: வெயிலை சந்திக்க தயாராகுங்கள்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் சென்னைக்கு இனிமேல் கிட்டத்தட்ட மழை அவ்வளவுதான் என தெரிய வந்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களுக்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பம் 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னை மக்கள் வெயிலை சந்திக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது

Leave a Reply