சென்னையில் பிராட்பேண்ட் சேவையில் சிறந்த நிறுவனம் எது? ஒரு அலசல்

சென்னையில்  பிராட்பேண்ட் சேவையில் சிறந்த நிறுவனம் எது? ஒரு அலசல்

இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் பிராட்பேண்ட் சேவை கிட்டத்தட்ட அனைவருக்குமே தேவைப்படுகிறது. இதில் சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது? என்பதை பார்ப்போம்

பிராட்பேண்ட் சேவை வழங்கி வரும் ஸ்பெக்ட்ரா 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த சேவையை தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல் ACT நிறுவனமும் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தை வழங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை மொத்தமாக கட்டினால் ஒன்பது மாத காலம் கூடுதல் சேவையையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனமும் 1 ஜிபிபிஎஸ் அளவிலான வேகம் மற்றும் 2500 ஜிபி வரையிலான டேட்டாவை வழங்கி வருகிறது. மேலும் ஜியோவில் டைட்டானியம் என்ற திட்டமும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றது. இதில் மாதம் 5000 ஜிபி டேட்டா கிடைக்கும்

ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவையில் மாதத்திற்கு ரூ.3,999 க்கு 1 ஜிபிபிஎஸ் அளவிலான வேகத்தையும் மற்றும் 3.3 டிபி அளவிலான டேட்டாவையும் பெறலாம்.

என்னதான் திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் நீங்கள் இருக்கும் பகுதியில் எந்த நிறுவனத்தின் கவரேஜ் நன்றாக உள்ளது என்பதை ஆராய்ந்து சரியான நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்

Leave a Reply