சென்னையில் பயிற்சி பெறும் கிரிகிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள்:

சென்னையில் பயிற்சி பெறும் கிரிகிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள்:

கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் ராணுவ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட போர் பயிற்சிகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நட்பு நாடுகளுக்கு இந்தியா போர்ப்பயிற்சி அளித்து வருவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் சென்னையில் 411 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 15ம் தேதி பயிற்சி பெற வந்த கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ பயிற்சி அதிகாரி கேப்டன் ராதிகா ஜக்கி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.