சென்னையில் சிஏஏவுக்கு எதிராக திடீர் போராட்டம்: போலீஸ் தடியடியால் பதட்டம்

சென்னையில் சிஏஏவுக்கு எதிராக திடீர் போராட்டம்: போலீஸ் தடியடியால் பதட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல போலீசார் எச்சரித்தும், போராட்டக்காரர்கள் மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது

சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

மேலும் திருவண்ணாமலை, வந்தவாசி, மதுரை நெல்பேட்டை, தேனி கம்பம்மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுவதாக போராடும் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் அறிவிப்பு செய்துள்ளதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply