சென்னையில் சரவண பவன் உள்ளிட்ட ஓட்டல்களில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னையில் சரவண பவன் உள்ளிட்ட ஓட்டல்களில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனை முடிந்தபின்னரே மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் பெங்களூரில் நடிகர்கள் யஷ், புனித் ராஜ்குமார் ஆகியோர் வீடுகளிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.