சென்னையில் சன்னிலியோன் – ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி

சென்னையில் சன்னிலியோன் – ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வரும் டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னிலியோனுடன் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். ஆண்ட்ரியாவின் பாடலுக்கு சன்னிலியோன் டான்ஸ் ஆடும் இந்த நிகழ்ச்சி சென்னையில் முதன்முதலாக நடைபெறவிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சன்னிலியோன் கேரளா வந்திருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply