சென்னையில் கொரியர் நிறுவனத்தில் தங்கக்கட்டிகள் பறிமுதல்

சென்னை யானைகவுனியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை யானைகவுனியில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து விரைந்த வந்த வருவாய்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த கொரியர் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கொரியர் நிறுவன மேலாளர் முரளி, நகைக்கடை உரிமையாளர் ஜெயின் ஆகியோர்களிடம் வருவாய்புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply