சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் திடீர் பழுது

சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் திடீர் பழுது

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் திடீரென நடுவானில் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 166 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

விமானம் பழுது குறித்து அறிந்த விமானிகள் அவசரமாக மீண்டும் விமானத்தை சென்னைக்கு திருப்பினர். சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் மாற்று விமானத்தில் விரைவில் பயணம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது

Leave a Reply