சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த பேருந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

தடம் எண் A1ஆக சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை இயக்கப்படவுள்ள இந்த பேருந்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னையில் 80 மின்சார பேருந்துகளும், மதுரை, கோவையில் தலா 10 பேருந்துகளும் முதல்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதன்பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் அதிக மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

சென்னை, மின்சார பேருந்து, சோதனை ஓட்டம், சென்னை, திருவான்மியூர்

Leave a Reply