சென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா? கலெக்டரின் அறிவிப்பு

சென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா? கலெக்டரின் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்த போதிலும் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழையும், விட்டு விட்டு மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது மட்டுமன்றி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கலாம் என கருதப்பட்டது ஆனால் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்கு செல்ல மாணவ, மாணவியர் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply