சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்து புதிய ஆட்சியை பதவி ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி இருக்கும் பொது மக்களுக்கு மேலும் ஒரு சுமையாக இது பார்க்கப்படுகிறது சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை இதோ

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.94.09 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் 32 காசுகள் உயர்ந்து 87.81 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது