சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை அறிமுகம்: இந்தியாவில் முதல்முறை

சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை அறிமுகம்: இந்தியாவில் முதல்முறை

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளையடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கியது.

முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு எந்தவித கூடுதல் கட்டணம், வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீபோஸ் ஆப் என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.