சென்னைக்கு இயக்கப்பட்ட சொகுசு பேருந்து சிறைபிடிப்பு: 

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்தை அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னையில் – திருவண்ணாமலை  இடையே சொகுசு பேருந்து இயக்கப்படுவதால் அரசு பேருந்து வருவாய் இழப்பு ஏற்படுவதாக அரசு பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த பேருந்தின் உரிமையாளர் தான் இந்த பேருந்தை அனுமதி பெற்றே இயக்குவதாகவும் தன்னிடம் உரிய ஆவணங்கள் அனைத்தும் இருப்பதாகவும் இருப்பினும் அரசு பேருந்து ஊழியர்கள் அராஜகமாக தனது பேருந்தை சிறைபிடித்து வைத்துள்ளதாகவே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 

தற்போது அந்த சொகுசு பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது

Leave a Reply