செந்தில் பாலாஜி திமுக வருகை ஏன்? ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

செந்தில் பாலாஜி திமுக வருகை ஏன்? ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

தினகரனின் அமமுக கட்சியில் இருந்த செந்தில்பாலாஜி நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இதனால் நேற்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது திமுகவில் அவர் இணைந்ததற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் ஹெச்.ராஜா கருத்து தெரிவிப்பதில் பொறுமையை கையாள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply