செக்ஸ் உறுப்பு குறித்து கமல்ஹாசனின் வித்தியாசமான பதில்!

செக்ஸ் உறுப்பு குறித்து கமல்ஹாசனின் வித்தியாசமான பதில்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் எந்த ஒரு கருத்தையும் வித்தியாசமாக சிந்தித்து தனது பாணியில் கூறுவார் என்பது தெரிந்ததே. அவர் கூறும் கருத்து ஒருசிலருக்கு புரியாது என்றாலும் ஒரு சில வருடங்கள் கழித்து அனைவருக்கும் புரியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காதலர் தினம் குறித்து அவர் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:‘செக்‌ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply