சூறாவளியை கலைக்க அணுகுண்டுகள்: டிரம்ப் திட்டம்

கடுமையான சேததங்களை ஏற்படுத்தும் சூறாவளிகள், அமெரிக்காவில் கரையை கடப்பதற்கு முன்னர் அணுகுண்டு வீசி கலைக்க முடியுமா என அதிகாரிகளிடம் அதிபர் டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமில்லை என பின்னர் விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய கருத்துகள் அவ்வப்போது பேசப்படும் நிலையில், புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிபர் டிரம்ப் விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது

டிரம்ப் கூறியது மோசமான யோசனை அல்ல என தெரிவித்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கடந்த 1950களில் எய்சன்ஹோவர் அதிபராக இருந்தபோது, விஞ்ஞானிகள் இத்தகைய ஒரு திட்டத்தை அமெரிக்க அரசிடம் பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply