சூர்யாவுக்காக தனுஷ் செய்த அட்டகாசமான உதவி

சூர்யாவுக்காக தனுஷ் செய்த அட்டகாசமான உதவி

விஜய்-அஜீத் ஆகிய இருவர் படங்களையும் இயக்கியவரும் நடிகருமான
எஸ்ஜே சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறி விட்டார். அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் எஸ் எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானிசங்கர் நடித்த மான்ஸ்டர் போலவே இருவரும் மீண்டும் இணையும் இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply