சூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு

சூர்யா நடித்து முடித்துள்ள ‘என்.ஜி.கே. திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் மே 31ல் வெளியாகவுள்ளது

நீண்ட தாமதமானாலும் சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என கருதப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் 29ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply