shadow

சூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது

இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் ரிலிஸ் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னரே போட்ட முதலீடை எடுத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *